மொனராகலையில் வீடு ஒன்றிலிருந்து இளம் தம்பதியின் சடலங்கள் மீட்பு

மொனராகலை, வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் இருந்து இளம் தம்பதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

36 வயதுடைய ஆணின் சடலமும் 21 வயதுடைய பெண்ணின் சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் உள்ளூர் மருத்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெல்லவாய செல்பாவ பிரசேத்தில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று வாழ்ந்து வந்துள்ளனர்.

இரண்டு சடலங்களும் படுக்கறையின் கட்டிலுக்கு மேல் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரதேச பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.