கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுள்ளது

இலங்கையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு தனி வண்ணங்களுடன் 11 சிறப்பு “ஸ்டிக்கர்கள்” இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.

கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளிலும் புதிய “ஸ்டிக்கர்’முறை நாளை காலை முதல் பயன்படுத்தப்படவுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

,அதன்படி, சுகாதார சேவை வாகனங்களுக்கான பச்சை ஸ்டிக்கர், ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் வாகனங்களுக்கு வெளிர் நீல நிறம், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு ஊதா, இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி செய்வோருக்கு வெளிர் பழுப்பு வண்ண ஸ்டிக்கர் தொழில்துறை துறை, அத்தியாவசிய விநியோகங்களுக்கு மஞ்சள், அத்தியாவசிய விநியோக சேவைகளுக்கு சிவப்பு, ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரேன்ஜ், குடிவரவு மற்றும் குடியேற்றம் தொடர்பான பணிக்கு வெள்ளை, மனிதாபிமான காரணங்களுக்காக கறுப்பு, (மரணம் , மருத்துவ பரிசோதனை போன்றவை) மற்றும் சாம்பல் வண்ண ஸ்டிக்கர், சமைத்த உணவு மற்றும் விநியோக சேவைகள். அதேநேரம் பொதுத்துறையில் மற்ற கடமைகளுக்கு சிறப்பு வண்ண ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சேவை அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை மற்றும் நிறுவனம் வழங்கிய கடிதங்களை சரிபார்த்த பின்னர் இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்படும். ஸ்டிக்கர் ஒட்டப்பட்டவுடன் ஒரு வாகனத்தில் ஐந்து பேர் மட்டுமே பயணிக்க முடியும். இன்று ஸ்டிக்கரைப் பெற முடியாதவர்கள் நாளை அதைப் பெற முடியும் என்றும் அஜித் ரோஹண கூறியுள்ளார்.