இலங்கையில் இன்று பதிவாகியுள்ள கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்

நாட்டில் மேலும் 1,055 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,976 ஆக பதிவாகியுள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 205,333 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, அடுத்த கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 25,000 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 50,000 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.