நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி தாய்மாருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை திங்கட் கிழமை ஆரம்பம்

நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி தாய்மாருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் திங்கட் கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என மகப்பேறு மற்றும் பெண்ணோவியல் விசேட மருத்துவர்களின் விஞ்ஞான நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2 லட்சத்து 75 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் இருப்பதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், நோய் தொற்று ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மாருக்கு விதிமுறைகளின் கீழ் கொானா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதீப் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் மற்றும் கொழும்பு காசல் வீதி பெண்கள் மருத்துவமனை ஆகியவற்றில் நடைபெறும்.