போக்குவரத்து செய்யும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் முறை அறிமுகம்

அத்தியாவசிய பொருட்களை போக்குவரத்து செய்யும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பயணத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதிகளில் கொழும்பு நகரிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒரு நாளைக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையிலானது.

இந்த ஸ்டிக்கர் முறைமைக்கு பதிலாக புதிய ஸ்டிக்கர் முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாளைய தினம் முதல் இந்த புதிய ஸ்டிக்கர் நடைமுறை அமுலாகும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரிற்குள் பிரவேசிக்கும் இடங்களில் தங்களது பூரண விபரங்களை வழங்கியதன் பின்னர் இந்த ஸ்டிக்கர் வழங்கப்பட உள்ளது.