பயணத்தடை அமுலில் உள்ள காலப் பகுதியிலும் விபத்துக்களினால் ஒரே நாளில் ஆறுவர் பலி

பயணத்தடை அமுலில் உள்ள காலப் பகுதியிலும் ஒரே நாளில் ஆறுவர் வெவ்வேறு விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் சுமார் ஆறு பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் பின்னர் ஒரே நாளில் இடம்பெற்ற அதிக வாகன விபத்துக்கள் நேற்று பதிவாகியுள்ளது.

பயணத் தடை அமுலில் உள்ள காலத்திலும் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவது வருந்ததக்கது எனவும் இது குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.