சவூதி அரேபியாவில் நடந்த விபத்தொன்றில் இலங்கையர் ஒருவர் பலி!

சவூதி அரேபியாவில் நடந்த விபத்தொன்றில் அங்கு அல் மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூரைச் சேர்ந்த 38 வயதான சுலைமாலெப்பை ஹமீட் சபீர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அவரது உறவினர் தெரிவித்தார்.

சடலம் சவூதி அரேபியாவில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் (6) அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை வாழ் இளைஞர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.