இலங்கையில் பயணத்தடை தொடர்ந்து நீடிக்ககூடிய சாத்தியம்!

நாட்டில் தற்பொழுது அமுலில் உள்ள பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்தப் பயணத் தடை மேலும் நீடிக்கப்படலாம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

14ம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை அதிகாரிகள் தொடர்ந்தும் நீடிக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மக்கள் வீடுகளிலேயே இருந்தால் எதிர்வரும் 14ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீடிக்கப்பட வேண்டிய அவசியமிருக்காது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கொழும்பு ஊடகங்களுக்கு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.