கொரோனா ஊரடங்கின்போது மக்கள் பணியில் இறங்கி வீடு வீடாகச் செல்லும் குட்டி இளவரசி..!! வியப்பில் உறைந்து போன நாட்டு மக்கள்..!!

எத்தகைய சூழலானாலும் களத்தில் இறங்கி பணியாற்றுவதில் தாய் தந்தையைப் போலவே இருக்கிறார்கள் இளவசர் வில்லியம் கேட் தம்பதியரின் பிள்ளைகளும்!பெற்றோர், பிள்ளைகள் உதவியுடன் வீட்டிலேயே பாஸ்தா தயாரிக்க, குட்டி இளவரசர் லூயிஸ் கூட உதவ, அதை பொட்டலங்களாக கட்டியிருக்கிறார்கள் வில்லியம் குடும்பத்தார்.

பின்னர் கொரோனா ஊரடங்கினால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியிருக்கும் முதியோர் முதலானவர்களுக்கு அந்த உணவை வீடு வீடாக சென்று விநியோகம் செய்துள்ளது இளவரசர் வில்லியம் குடும்பம்.குட்டி இளவரசியார் சார்லட் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவர் வீடு வீடாகச் சென்று உணவு விநியோகிக்கும் படங்களை வெளியிட்டுள்ளது அரண்மனை வட்டாரம்.அந்த புகைப்படங்களை எடுத்தது வேறு யாருமில்லை, வழக்கம் போல் சார்லட்டின் தாய் இளவரசி கேட்தான்!கேட் சிறுமியாக இருக்கும்போது எப்படி இருந்தாரோ, அதேபோல் காட்சியளிக்கும் சார்லட், கையில் உணவு பொட்டலத்துடன் வீடு ஒன்றின் கதவைத் தட்டும் புகைப்படம் ஒன்றையும் காணமுடிகிறது.மகாராணியாரின் பேத்தியார் இப்போதே மக்கள் சேவையில் இறங்கிவிட்டார் போலும். ஒரு வீட்டுக்கு செல்லும்போது மழை பிடித்துக்கொண்டிருகிறது.கதவைத் திறந்த அந்த வீட்டில் வசிப்பவர், வாசலில் இளவரசர் குடும்பம் உணவுப் பொட்டலத்துடன் சொட்டச் சொட்ட நனைந்தபடி நிற்பதைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப்போயிருக்கிறார்.அவர்கள் மழையில் முற்றிலும் நனைந்து போயிருந்தார்கள், இருந்தாலும், தங்கள் பங்குக்கு சேவை செய்ய விரும்பி களத்தில் இறங்கிவிட்டார்கள் போலும் என்கிறார் அவர்.