கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணத்தடைகளை மீறிய 11 பேரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணத்தடைகளை மீறிய 11 பேரைக் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் தேவையின்றி வாகனங்களில் சென்ற 11 பேரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்டோரை பொலிஸார் பிடித்து எச்சரிக்கை செய்தும் விடுவித்துள்ளனர்.

பயணத்தடை காலத்தில் அனுமதியின்றி செயற்பட்ட 11 பேருக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்செயற்பாடு திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய், திருகோணமலை, மூதூர், கிண்ணியா மற்றும் உப்புவெளி போன்ற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.