எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கையில் பாடசாலைகள் திறக்கப்படுமா?

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

29ஆம் திகதி பாடசாலை திறப்பது குறித்து வெளியாகி வரும் தகவல்கள் குறித்து சிங்கள தொலைக்காட்சியொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாடசாலைகளை திறப்பது குறித்து தற்போதைக்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.