முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 577 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 577 பேருக்கு இதுவரை கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 231 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனடிப்படையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 35 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 62 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 115 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 10 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பேரும், மணலாறு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 4 பேருமாக 231 பேர் தொடர்ந்து கோவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 2 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 300 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 13 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 19 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 12 பேருமாக 346 பேர் கோவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய 1224 குடும்பங்களைச் சேர்ந்த 3179 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 106 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட154 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 126 குடும்பங்களைச் சேர்ந்த 263 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 48 குடும்பங்களைச் சேர்ந்த 185 பேரும், மணலாறு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேருமாக 487 குடும்பங்களைச் சேர்ந்த 1156 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 144 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 363 குடும்பங்களைச் சேர்ந்த 826 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட159 குடும்பங்களைச் சேர்ந்த 513 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும் மணலாறு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 43 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேருமாக 737 குடும்பங்களைச் சேர்ந்த 2023 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.