இலங்கையர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தி… கொரோனாவிலிருந்து மேலும் பத்துப் பேர் குணமடைவு..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 690 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 511 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 296 பேர் அடங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.