இரு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவிட் வைரஸ் தொற்று நோயின் விளைவாக இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது .

கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா மற்றும் விமான அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் படி, அனைத்து வானூர்தி நிறுவனங்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 14 நாட்களில் இந்தியா மற்றும் வியட்நாமில் இருந்து இலங்கைக்கு வரும் உள்வரும் பயணிகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.