நடிச்சு ஏமாத்துறதுல இந்த ராசிக்காரர்கள் பலே கில்லாடி !கவனமா இருங்க!

தவறுகள் செய்வது மனித இயல்பு, தவறுகள் செய்யாமல் எதையும் கற்றுக்கொள்ளவும் முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆம் செய்த தவறுகளால் இருந்தும் எதுவும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய தவறாகும். அந்த வகையில் இப்படி அஜாக்கிரதையாக இருப்பதும், தவறுகளில் இருந்து பாடங்களில் கற்றுக்கொள்ளாமல் இருப்பதும் சிலரின் பிறவி குணங்களாக இருக்கும். அதற்கு அவர்கள் பிறந்த ராசியும் முக்கியமான காரணமாகும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தன் தவறிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பார்க்கலாம்.


கும்பம்
நீங்கள் கும்ப ராசியில் பிறந்தவராக இருந்தால் நீங்கள் எப்போதும் உங்கள் தவறுகளில் இருந்து எதையும் கற்றுக்கொள்ள மாட்டிர்கள். அதற்கு காரணம் ஒரு செயலை செய்வதற்கு முன் தீர ஆலோசிப்பது என்பது இவர்கள் அகராதியிலேயே கிடையாது. இவர்களுக்கு பணம் சம்பாதிப்பதோ அல்லது வேலை செய்வதிலோ எந்த ஆர்வமும் இருக்காது, எனவே அவர்கள் அதற்கான எந்த முயற்சியும் செய்யமாட்டார்கள். அவர்கள் செய்வது தவறு என்பதே அவர்களுக்கு தெரியாது, பிறகு எப்படி எ அவர்கள் தவறிலிருந்து பாடம் கற்பார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் உண்மையிலேயே தங்கள் தவறிலிருந்து பாடம் கற்க முயலுவார்கள். அவர்கள் செய்தது தவறு எனில் அதை அமைதியாக ஒப்புக்கொண்டு அதனை சரிசெய்ய முயற்சி செய்வார்கள். ஆனால் அதுவரை மற்ற எந்த செயல்களிலும், வேலைகளிலும் ஈடுபடமாட்டார்கள். இதுதான் அவர்களின் மிகப்பெரிய பிரச்சினை. அவர்கள் செய்யும் மாற்றங்கள் அவர்களுக்கு சரியாக பலனிக்கவில்லை எனில் அவர்கள் பிடிவாதத்தால் அந்த தவறை புறக்கணித்து விடுவார்கள். பின் மீண்டு மீண்டும் அதே தவறை செய்வார்கள்.

மேஷம்
ஒரு வேலையே முடிப்பதற்கு நீங்கள் மேஷ ராசிக்காரர்களை தாரளமாக நம்பலாம், ஆனால் அந்த வேலை முடிய நீங்கள் அவர்களை சரியாக வழிநடத்த வேண்டும். இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள், தான் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆனால் இவர்கள் அனுபவசாலிகள் கூறும் எந்த அறிவுரையையும், உதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் தவறை திருத்தி கொள்ளவோ, அதிலிருந்து கற்றுக்கொள்ளவோ முயலமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் தவறு செய்ததையே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது அவர்களுக்கு பல நேரத்தில் தோல்வியை ஏற்படுத்தும்.

மீனம்
நீங்கள் மிகவும் மென்மையானவரவும் ,எளிதில் தூண்டப்படக்கூடியவராகவும் இருந்தால் நீங்கள் நிச்சயம் மீன ராசிக்காரராகத்தான் இருப்பீர்கள். ஆதலால் மற்றவர்கள் உங்கள் தவறுகள் உங்களை எப்படி மோசமானவராக மாற்றுகிறது என்று மற்றவர்கள் தூண்டும் போது உங்களின் குற்ற உணர்ச்சியே உங்களை பாடாய்படுத்தும். இவர்கள் தவறு செய்வதில் மகிழ்ச்சியை காண்பார்கள் அனால் அதிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக தங்களை பாதிக்கப்பட்டவராகவும், பரிதாபத்திற்கு உரியவராகவும் கட்டிக்கொள்வார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கைமுறை அனைவரும் விரும்புவதாக இருக்கும். ஆனால் அனைவரையும் எடை போடுவது, செயலை தள்ளி போடுவது அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இவர்கள் தங்களை எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவராக காட்டிக்கொள்ள பல தந்திரங்களை செய்வார்கள், உண்மையில் இவர்களின் பேச்சுக்கள் சர்க்கரை தடவிய பொய்யாகும். இறுதியில் அவர்கள் எப்படியும் மற்றவர்களை காயப்படுத்திவிடுவார்கள். தாங்கள் நல்லவர்கள் போல நடிப்பதால் மற்றவர்கள் எப்படி காயப்படுகிறார்கள் என்பதை இவர்கள் ஒருபோதும் உணரமாட்டார்க்ள.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தவறிலிருந்து கற்றுக்கொள்பவர்கள்தான், ஆனால் அது தவறு என்று அவர்கள் உணரும்வரை உயிர்போகும் நிலையிலும் அதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தாங்கள் சொதப்பிய ஒரு செயலை வெற்றிகரமான செயல் என்று நிரூபிக்க இவர்கள் அதிக நேரடி செலவழிப்பார்கள். இவர்களின் விடாமுயற்சி பாராட்டுக்குரியதுதான், ஆனால் அவர்கள் அதை காட்டும் இடம் மற்றவர்கள் அவர்களை நோக்கி சிரிக்கும்படி செய்துவிடும்.-