யாழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் கொரோனா அறிகுறி..!! தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள்..!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.காய்ச்சல் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று முற்பகல் 10.30 மணிவரையான நிலவரத்தின் படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக கண்காணிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.