நுகர்வோருக்கு முக்கிய செய்தி…உள்ளூர் பால்மாக்களின் விலையில் திடீர் அதிகரிப்பு !!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைக்கு நிகராக உள்ளூர் பல்மாவின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஒப்புதல் அளித்துள்ளது.

உள்ளூர் பால்மா உற்பத்தியாளர்கள் நிதியமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 345 இலிருந்து 380 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 860 இலிருந்து 945 ரூபாவகவும் உயர்த்தப்பட்டுள்ளது.