நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இன்று முதல் திறப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சதொச வர்த்தக நிலையங்கள் அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்கப்படும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும், நாளையும் மொத்த வியாபாரங்களுக்காக திறந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.