உலகிலேயே முதன்முதலாக சீனாவில் மனிதரை மிரட்டும் பறவைக் காய்ச்சல்!

சமீபத்தில் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் புதிய வகை பறவைக் காய்ச்சல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுவரை பறவைகளைத் தாக்கிய பறவைக் காய்ச்சல், மனிதரைத் தாக்கியது இல்லை. ஆனால் 41 வயதான ஒருவர் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.

அந்த அறிக்கையின் படி, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்நபர் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மே 28 ஆம் தேதி அவருக்கு H10N3 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களை கொடுக்கவில்லை. தற்போது அவர் எவ்வித பிரச்சனையும் இல்லாமல், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அளவில் பூரணமாக குணமாகியுள்ளார்.

பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள்

* இருமல்

* காய்ச்சல்

* தொண்டை புன்

* தசை வலி

* தலை வலி

* மூச்சு விடுவதில் சிரமம் இன்னும் சில சமயங்களில் மூக்கு ஒழுகல், தும்மல், வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் கண் தொற்று போன்ற அறிகுறிகளையும் அனுபவிக்கலாம்.