எதிர்வரும் 7ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமா?

எதிர்வரும் 7ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமாக இருந்தால் மக்கள் எவ்வாறாக செயற்பட வேண்டும் என்ற விடயத்தை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுப்படுத்தியுள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர், வேலைகளுக்கு செல்வோருக்கு வழமை போன்று அனுமதி வழங்கப்படும்.

எனினும், வேலைக்கு செல்லாத ஏனையோருக்கு அடையாள அட்டை நடைமுறையின் பிரகாரமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இதேவேளை, 7ஆம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாட்டை தொடர்வது குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை.

கோவிட் செயலணி மற்றும் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியே, எதிர்கால தீர்மானங்கள் எட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.