உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத 5 முக்கிய உணவுப்பொருட்கள்- அதை மீறி சாப்பிட்டால் ஆபத்து?

குழந்தைகளை வளர்க்கும் போது, பெற்றோர்களும் அவர்களுடன் சேர்ந்து வளர்கிறார்கள். குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு.

குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியம் கிடையாது. தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அப்படி பெற்றோர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை தான் குழந்தைகளை உண்ண வைப்பது. சில உணவுகளை தடுத்தாலும் அடம்பிடித்து வாங்கி சாப்பிடுவார்கள். எனினும் நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு சில உணவுகளைத் தர கூடாது எனப் பட்டியல் இருக்கிறது. அவற்றை பார்க்கலாம்.

  1. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சிவிங் கம் வாங்கித் தர கூடாது.
  2. இந்த சிவிங் கம் வயிற்றில் செரிமானமாகாது, வயிறு வலி போன்ற தொல்லைகளை ஏற்படுத்தி குழந்தையின் உடலைக் கெடுத்துவிடும்.
  3. சாக்லேட்டில் அதிகபடியான சர்க்கரையும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதால் முடிந்தவரை சாக்லெட்களை தவிர்க்க வேண்டும்.
  4. பிஸ்கட்டுகள் அனைத்தும் மைதாவால்தான் செய்யப்படுகிறது. ஆனால் ஆர்கானிக் சிறுதானிய பிஸ்கெட்களை வாங்கித் தருவது நல்லது.
  5. கடையில் விற்கும் பொரித்த எண்ணெய் உணவுகளான சமோசா, பக்கோடா, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற திண்பண்டங்களால் வயிறு கெடும். வயிறு தொடர்பான தொல்லைகளும் வரும்.
  6. குளிர்பானங்கள் மிகவும் ஆபத்தானது. செயற்கை மில்க் ஷேக் போன்ற அனைத்தையும் குழந்தைகளுக்கு தரக் கூடாது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஐஸ்க்ரீம் சாப்பிட கூடாது.
  7. சளி, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
  8. நூடுல்ஸ் முழுக்க மைதாவில் செய்யப்படும் உணவு. இதனுடன் வரும் மசாலாவில் சுவையூட்டியும் அதிகபடியான உப்பும் மோனோ சோடியம் குளுட்டமேட் எனும் கெமிக்கலும் கலக்கப்படுகின்றன.
  9. இதனால் மலக்காற்று துர்நாற்றமாக வரும்.