இலங்கையில் இருக்கும் சிறார்களை தாக்கும் புதிய காய்ச்சல் நோய்!

சிறார்களுக்கு இடையில் பரவி வரும் நோய் ஒன்றை பொரள்ளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா கண்டறிந்துள்ளார்.

இது ஒரு வகையான காய்ச்சல் நோய் எனவும் இந்த நோய் 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு அதிகளவில் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கண், நாக்கு, தோல் என்பன சிவந்து போதல், மூட்டு வலி, மூட்டு வீக்கம், சருமத்தில் கெப்பலங்களல் ஏற்படுவது இந்த காய்ச்சல் நோயின் ஆரம்ப அறிகுறிகள் எனவும் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

இந்த நோய் அறிகுறிகள் அல்லது காய்ச்சல் என்பன 14 நாட்களுக்கு மேல் நீடித்தல் கட்டாயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

அத்துடன் இந்த நோயை கோவிட் தொற்று நோயின் பக்கவிளைவாகவும் கருத முடியும் எனவும் மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.