ஏழரை சனியில் இருந்து ஜென்ம சனியிடம் சிக்க போவது எந்த ராசிக்காரர் தெரியுமா?

ஜூன் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு திடீர் வருமானவம் வரும், சிலருக்கு செலவுகள் வரிசை கட்டி நிற்கும்.

இந்த மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படியிருக்கும் பண வருமானம் வருமா? தொழில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், நோய்களால் பிரச்சனை வருமா என்று பார்க்கலாம்.

கிரகங்களின் இடமாற்றத்தை பார்த்தால் செவ்வாய் இடப்பெயர்ச்சி ஜூன் 2ஆம் தேதி நிகழ்கிறது.

கடக ராசியில் நீச்சமடைந்து பயணம் செய்கிறார் செவ்வாய். ரிஷப ராசியில் புதன் ராகு உடன் பயணிக்கிறார்.

சூரியன் ஜூன் 15ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி சுக்கிரன் உடன் இணைகிறார். 20ஆம் தேதி குரு வக்ர காலம் ஆரம்பமாகிறது. ஜூன் 22ஆம் தேதி புதன் வக்ர சஞ்சாரம் முடிகிறது.

சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி நீச்சம் பெற்ற செவ்வாய் உடன் இணைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி சஞ்சாரத்தினால் ஜூன் மாதத்தில் இந்த நான்கு ராசிகளின் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும், பண வருமானம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். உங்கள் ராசிநாதன் மூன்றாம் வீட்டில் அதிசாரமாக பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் 20ஆம் தேதிக்கு மேல் வக்ரமடைகிறார்.

சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். மிதுன ராசியில் உள்ள சுக்கிரனின் நேர் பார்வை உங்கள் ராசி மீது விழுகிறது. செவ்வாய் நீச்சம் பெற்று எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார்.

உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்க பொறுமையும் நிதானமும் தேவை. நவகிரகங்களின் சஞ்சாரம் சற்றே சாதகமற்ற நிலையில் இருப்பதால் பொறுமை நிதானம் தேவை.

வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் அவசியம். சூரியன் 15ஆம் தேதி ஏழாம் வீட்டிற்கு சென்று சுக்கிரன் உடன் இணைகிறார். பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம்.

நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். ஏழாரை சனியின் முடிவு காலமாக இந்த காலத்தில் நினைத்த காரியங்கள் இழுபறியாகவே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும்.

பெரிய திட்டங்கள் எதுவும் வேண்டாம். திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் முயற்சி செய்ய வேண்டாம்.

இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள், வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு எதுவும் முயற்சி செய்ய வேண்டாம். இந்த மாதத்தில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும்.

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, ராசியில் சனி ஆட்சி பெற்று வக்ர நிலையில் பயணம் செய்கிறார். இரண்டாம் வீட்டில் குரு பகவான், 5ஆம் வீட்டில் புதன், ராகு, சூரியன் பயணம் செய்கின்றனர். ஆறாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார்.

ஏழாம் வீட்டில் செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். 15ஆம் தேதி சூரியன் 6ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார்.

இரண்டாம் வீட்டில் குரு மாத இறுதியில் வக்ரமடைவது உங்களுக்கு ஆதாயமான கால கட்டமாகும். மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ண நிறைவேறும்.

கட்டிய வீட்டினை வாங்கலாம். பாதக ஸ்தானாதிபதியாக செவ்வாய் நீச்சம் பெற்றிருப்பதோடு சனியில் பார்வை கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கவனம் தேவை. அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். ஆறாம் வீட்டில் சுக்கிரன் மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு செல்கிறார். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த மாதம் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழில் முயற்சி செய்யலாம்.

வேலையில் இருந்த பிரச்சினைகளும், வாழ்க்கைத்துணையால் ஏற்பட்ட பிரச்சினைகளும் நீங்கும். செவ்வாய் சனி பார்வையால் சில பாதிப்புகள், தாமதங்கள் ஏற்படும்.

சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து எழுதுவதைத் தவிர்க்கவும். திருமணம் தொடர்பாக இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் தடை தாமதங்கள் ஏற்படும். புதிய முடிவுகளை எடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுப்பதால் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, ராசியில் குரு, நான்காம் வீட்டில் சூரியன் ராகு, புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது, விரைய ஸ்தானத்தில் சனி வேலை செய்யும் இடத்தில் பிரமோசன் கிடைக்கும்.

நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். விரைய சனி காலமாகும். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிகளை நண்பர்கள் உதவியோடு சமாளிப்பீர்கள்.

ஏழரைசனியின் தாக்கத்தால் பொருளாதார நெருக்கடிகள் வந்து போகும். அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக தியானம் செய்வது நல்லது.

மனரீதியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தாலே தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மாணவர்களுக்கு சில குழப்பங்கள் வரலாம் புதிய கல்வியை தேர்வு செய்யும் முன்பாக பெற்றோர், ஆசிரியர்களை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவு செய்யவும். செவ்வாய் உங்கள் தொழில் கிரகம் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம்.

திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசும் போது கவனம் தேவை. காதலிப்பவர்கள் இந்த மாதம் செய்பவர்கள் பாதுகாப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும் காரணம் ஆறாம் வீட்டில் இந்த மாதம் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நிகழ்வதால் எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை.

கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாக பேசி பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை.

மீனம்

குரு பகவானை ராசி நாதனக் கொண்ட மீன ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மூன்றாம் வீட்டில் சூரியன், ராகு, புதன், நான்கில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் அதிகரிக்கும்.

வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய பொறுப்பை தட்டிக்கழிக்க வேண்டாம் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருப்பதும் அவசியம்.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பும் நெருக்கவும் கூடும். உறவினர்களிடத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம் கோபத்தை குறைத்து நிதானமாக பேசவும்.

சில நேரங்களில் வீண் விரைய செலவுகள் வரலாம் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

திடீர் திருப்பங்களும் எதிர்பாராத பண வரவும் வரும். புதிய வாய்ப்புகள் அதிகம் வரும் அதனை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

பிள்ளைகளிடம் அன்பும் பரிவும் காட்டுவது அவசியம். வாகன பயணங்களில் நிதானம் தேவை.