அச்சம் இல்லாமல் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள்..! அங்கஜன் வேண்டுகோள்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தடுப்பூசி பெறுவதே இழந்துபோன இயல்வு வாழ்வை மீட்பதற்கான வழியாகும் என நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிருத்தி குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் கூறியிருக்கின்றார்.
யாழ்.மாவட்டத்திற்கான தடுப்பூசிகளை மாகாண சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பேரழிவை சந்தித்து நின்றிகின்றது.

அதற்கு நாமும் விதிவிலக்கல்ல. எங்களுடைய மண்ணிலும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகின்றது. தினசரி மரணங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றமை வேதனையளிப்பதாக உள்ளது. இந்நிலையில் நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய குடும்பம்,

மற்றும் சமூகத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பாளிகள். அதனை நிறைவேற்றுவதற்கும் அண்மைய நாட்களில் நாங்கள் இழந்துபோன இயல்பு வாழ்வை மீட்பதற்கும் தடுப்பூசி ஒன்றே வழியாகும். அந்தவகையில் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோருக்கும்

தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கும், எங்கள் மண்ணிலிருந்து மக்களை காக்க போராடும் சுகாதார அதிகாரிகள், வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கும் பெரு நன்றியை கூறிக்கொள்ள விரும்புகிறேன். தடுப்பூசிகள் குறித்து விமச பிரச்சாரங்களை கருத்தில் கொள்ளவேண்டாம்.

பயன்பாட்டிலுள்ள அனைத்து தடுப்பூசிகளும் நன்மை பயப்பவையாகவே உள்ளது. ஆகவே அச்சமற்று தடுப்பூசி பெற்றுக் கொண்டு எங்கள் குடும்பத்தையும், எங்கள் சமூகத்தையும் பாதுகாக்க எங்கள் ஒவ்வொருவரிடமும் காலம் கொடுத்துள்ள அளப்பரிய பணியை செவ்வனே நிறைவேற்றவேண்டும் என்றார்.