இலங்கையில் தற்போது பரவும் நான்காவது கொவிட் அலையினால் பெண்களுக்கு ஆபத்தா?

இலங்கையில் தற்போது பரவும் நான்காவது கொவிட் அலையினால் எதிர்வரும் நாட்களில் பெண்களின் மரணங்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட கூடிய வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார துறையை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இம்முறை கொவிட் அலையில் பெண்களின் மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் தகவல் வெளியிட்டுள்ளனர்.

முதலாவது கொவிட் அலையில் ஆண்களின் மரணங்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்பட்டுள்ளது. எனினும் தற்போது பெண்களின் மரணங்கள் ஆண்களின் மரணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது சமமாக உள்ளதென குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் பெண்களில் அதிகமானோர், நீரிழிவு, இதய நோய் போன்ற தொற்றா நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல எனவும் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய் பால் வழங்கும் பெண்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.