வீட்டிலிருந்து தப்பிச் சென்ற கோவிட் தொற்றுக்கு இலக்கான இளைஞர்

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெகசின் வீதியை சேர்ந்த கோவிட் தொற்றுக்கு இலக்கானதாக கூறப்படும் நபரொருவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

28 வயதுடைய சங்கீத் தனுஸ்க என்ற இளைஞரே தனது வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி குறித்த நபருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் பொரளை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளும், சுகாதார பிரிவினரும் இணைந்து குறித்த நபரை கோவிட் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்புவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளதுடன், இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718 591 87, பொரளை பொலிஸ் நிலையம் – 0112 694 019 என்பவற்றுக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.