இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்கான யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் உயிரிழப்பு

யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரொருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியை சேர்ந்த பெண் விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரியவருவதுடன், விரிவுரையாளரின் சடலத்தை சுகாதார விதிமுறைகளின் படி கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.