இலங்கையில் இன்று தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்

கோவிட் 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இராணுவத்தின் தலையீட்டில் இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தை ரொக்சி தோட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களில் இன்று தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

வெள்ளவத்தை ரொக்சி தோட்டம், பிட்டகோட்டே பெரகத்திபுர, மாளிகாவத்தை பீ.டி. சிறிசேன மைதானம் ஆகியவற்றில் இன்று தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.