வவுனியா திருநாவற்குளத்தில் 9 பேர் உட்பட 26 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது

வவுனியா திருநாவற்குளத்தில் 9 பேர் உட்பட 26 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று   இரவு வெளியாகின.

அதில், வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும்,  ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், சூசைப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், கோயில்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குட்செட் வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 26 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் கோவிட் தாக்கத்தின் மூன்றாம் அலை காரணமாக ஒருவரர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதுடன், தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.