ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இன்று  ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்களுடன் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து நடாத்திய சோதனையின் போதே இந்த ஆறு சந்தேக நபர்களும், அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் இருந்து 890 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டது.

அத்துடன் இவர்கள் 21,25,26,28,31,35 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் வாழைச்சேனை , பிறைந்துரைச்சேனை, காவத்தமுனை, கேணிநகர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.