இலங்கையில் கோவிட் மரணங்கள் சடுதியாக உயர்வடைந்துள்ளது!

இலங்கையில் மேலும் 38 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1363 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்றைய தினம் 2845 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் முடிவுகளின் படி இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 177,711 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நோய் தொற்றிலிருந்து 143,362 பேர் குணமடைந்துள்ள நிலையில், 29,986 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.