உலகை வேகமாக அச்சுறுத்தும் கொரோனா முடிவுக்கு வரும் காலம்..! வெளிநாட்டு ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்..

கொரோனா வைரஸ் எப்போது முடிவடையும் என்பது தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் உருப்பெற்ற கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் உலகளவில் பல நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.அதிலும், குறிப்பாக அமெரிக்கா இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் பிரித்தானியா போன்ற நாடுகளை அதிகளவில் பதித்துள்ளது.இலங்கையிலும், தற்போதுவரை 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிவ் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்குவரும் என்கின்ற தகவல் ஒன்றை சிங்கப்பூரிலுள்ள தொழில்நுட்ப மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமொன்று இன்று வெளியிட்டிருக்கிறது.இதன்பிரகாரம் எதிர் வரும் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரம் இந்த தொற்று முடி முடிவுக்கு கொண்டுவரப்படும் என்ற ஆருடம் வெளியிடப்பட்டுள்ளது.இதுவரை கொரோனா தாக்கிய நாடுகளில் அதனால் பீடிக்கப்பட்டவர்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின்படி இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.