யாழில் சீல் வைக்கப்பட்ட மதுபான சாலைகள் !

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைகளுக்கு மது வரித் திணைக்கள அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னேற்பாடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை தற்போது அமுலில் காணப்படுகின்றது.

பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை என அரசாங்கம் ஏலவே அறிவுறுத்தியுள்ளது.

அதனால் நாடுமுழுவதும் மதுபானசாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்பட்டு வருகின்றன.