வங்கி ஒன்றில் 910 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் கைது

மகரகமை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 910 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மொனராகலை பிபிலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

வத்தேகெதர கூட்டுறவு வங்கியின் முன்னாள் பணிப்பாளரான பியங்க நிஷாந்த குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நுகேகொடை கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.