கொரோனா தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் !

இலங்கையில் மே 01 முதல் 25 ஆம் திகதி வரை மொத்தம் 61,754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் இதை புதன்கிழமை (26) தெரிவித்துள்ளது.

இந்த தரவுகளுக்கு அமைய கொழும்பு, கம்பஹா மற்றும் கழுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய சிவப்பு மண்டலமாக காணப்படுகின்றன.

இதேவேளை நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட 2728 பேரில் கொழும்பில் 522 பேரும், கம்பஹாவில் 558 பேரும், களுத்துறையில் 476 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.