யாழில் 20 வயதான யுவதி பரிதாப பலி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி , கைதடி கிழக்கு பகுதியில் யுவதி ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கைதடி கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா தயாழினி எனும் 20 வயதான யுவதியே கிணற்றில் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதியின் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.