கனடா அரசு முக்கிய நாடு ஒன்றின் விமானங்களுக்கு மேலும் ஒரு மாதம் தடையை நீடித்தது

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.


இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அதேபோல் பாகிஸ்தானிலும் கொரனோ பாதிப்பு அதிகம் உள்ளதால் பாகிஸ்தானுடனான விமானப் போக்குவரத்துக்கும் பல நாடுகள் தடை விதித்துள்ளன.

அந்த வகையில் கனடா கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஒரு மாதத்துக்கு தடை விதித்தது. இந்த தடை நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமானங்கள் வருவதற்கு மேலும் 30 நாட்கள் தடை விதித்து கனடா அரசு உத்தரவிட்டது.

அதன்படி அடுத்த மாதம் 21-ந்தேதி வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கான தடை அமலில் இருக்கும் என கனடா அரசு அறிவித்துள்ளது.