சஜித் பிரேமதாஸவுக்கு கொவிட் தொற்று உறுதி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஜலனி பிரமேதாச ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

தனது மனைவிக்கு கொவிட் நோய்த் தொற்று அறிகுறிகள் காணப்பட்டதனால் நேற்றைய தினம் PCR பரிசோதனை செய்து கொண்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன் போது மனைவிக்கு கொவிட் தொற்று உறுதியானது எனவும் பின்னர் தாமும் பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதன் போது தமக்கும் கொவிட் தொற்று உறுதியாகியிருந்தமை தெரியவந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.