கிளிநொச்சியில் தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு கொரோனா உறுதி!

கிளிநொச்சியில் நஞ்சருந்தி 15 வயதான மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியொருவர் நேற்று இரவு 9 மணியளவில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், நேற்று இரவு 10 மணியளவில் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இதேவேளை, இன்று நடந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.