பயணத்தடை நீடிப்பு தொடர்பில் வெளியான தகவல்

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரு தவணை பயணக்கட்டுப்பாடு நாளை மறுதினம் (25) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் இரவு11 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.


மேலும் 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு அமுலாகும் பயணக்கட்டுப்பாடு 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும்.

28ஆம் திகதிக்குப் பின்னரும் பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் கலந்துரையாடிய பின்னர் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.