பயணத் தடை நீக்கினாலும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

எதிர்வரும் 25ம் திகதி மதுபானசாலைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தளர்த்தப்பட்டாலும், மதுபானசாலைகள் திறக்கப்படாது என இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


தற்போதைய பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட தினத்திற்கு முதல் நாளில் மதுபான சாலைகளில் மக்கள் பெருமளவில் குழுமியிருந்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,கோவிட் பரவலைக்கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக நேற்று இரவு முதல் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.