ராஜயோகத்துடன் பிறந்த இந்த 4 நட்சத்திரங்களில் உங்க நட்சத்திரம் என்ன?

நாம் பிறந்த ராசி எப்படி நம்முடைய வாழ்க்கையில் முக்கியப்பங்கை வகிக்கிறதோ அதே அளவிற்கு நம்முடைய நட்சத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. நட்சத்திரங்கள் என்பது வேத ஜோதிடம் மற்றும் வானியலில் நட்சத்திரம் என்பது பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக விண்மீன் என அழைக்கப்படும் இது பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் நீள்வட்ட பாதைக்கு ஓரளவு அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் ஆகும். பூமியிலிருந்து சந்திரனின் தூரத்தை மதிப்பிடுவதற்கு அவை பெரும்பாலும் உதவுகின்றன. மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவை நம்முடைய வாழ்க்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

நட்சத்திரங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன?
வேத ஜோதிடத்தின் படி, நம் வாழ்க்கையில் நட்சதிரங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. கிரக நிலைகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் போலவே, நட்சத்திரங்களும் நம் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை கடந்து செல்லும்போது, அவற்றின் இயல்பு அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் சிறப்பியல்புகளால் செல்வாக்கைப் பெறுகிறது. எனவே இது இறுதியில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை கிரகத்தின் நிலை தீர்மானிக்கிறது. ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த நட்சத்திரங்களாக இருக்கும் நட்சத்திரங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அவிட்டம்
உங்கள் ஜாதகத்தில் சக்திவாய்ந்த அவிட்ட நட்சத்திரத்தை வைத்திருப்பது உங்கள் வாழ்க்கையில் செல்வத்தை குறிக்கிறது. இது ஒருவரின் ஆளுமையை தீர்மானிக்கும் 23 வது நட்சத்திரமாகும், மேலும் இது ‘மகிழ்ச்சியின் நட்சத்திரம்’ என்றும் அறியப்படுகிறது. இது சிவபெருமானின் சூலம் அல்லது கிருஷ்ணரின் புல்லாங்குழலை குறிக்கிறது. மேலும் இந்த நட்சத்திரத்தின் ஆளும் கிரகம் செவ்வாய் கிரகம் மற்றும் தெய்வங்களாக அஷ்ட (எட்டு) தேவர்களைக் கொண்டுள்ளது. இந்த நட்சத்திரம் செல்வத்தைக் குறிக்கிறது, மேலும் இந்த நட்சத்திர மக்கள் இசை, பாடல் அல்லது நடனம் மீது உள்ளார்ந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகம்
மக நட்சத்திரம் ‘சக்தியின் நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரம் ஒரு அரசரின் அறையை சிம்மாசனம் அல்லது பல்லக்குடன் குறிக்கிறது. கேது அல்லது தெற்கு முனை அவர்களின் ஆளும் கிரகமாக இருப்பதால், அவர்கள் மன்னர்கபோல இருக்க விரும்புவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரம்பரை சொத்து அல்லது செல்வம் இவர்களுக்கு பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராயல்டி, அதிகாரம், அந்தஸ்து மற்றும் மரியாதை ஆகியவை முக்கியமாக இருக்கலாம்.

புனர்பூசம்
ஏழாவது ஆளுமை நட்சத்திரமான புனர்பூசம் ‘புதுப்பித்தலின் நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. இது ‘வில் மற்றும் அம்புகள்’ அல்லது ‘ஒரு வீடு அல்லது தங்குமிடம்’ என்பதன் அடையாளத்தைக் குறிக்கிறது. குருவால் ஆளப்படும் இந்த நட்சத்திரம் அதிதியை தெய்வமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த நக்ஷத்திரத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், அது அதிர்ஷ்டத்தின் சக்கரத்தை இயக்க முடியும். செல்வம் என்பதையும் தாண்டி உயர்ந்த செல்வாக்கையும் இவர்கள் அடைவார்கள். கற்பனைத்திறன், புதுமை, பாடுவது, எழுதுதல் ஆகியவையும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும் ஒரு சில குணங்களாகும்.

பூரம்
11வது நட்சத்திரமான இது ஊஞ்சலால் குறிக்கப்படுகிறது. இந்த நட்சத்திரம் சுக்கிரனால் ஆளப்படுகிறது. மகம் மற்றும் புனர்பூசம் நட்சத்திரங்கள் அனுபவிக்கும் இன்பங்களுடன் பூர நட்சத்திரம் சிறப்பான குணங்களையும் கொண்டிருப்பார்கள். கலை சார்ந்த ஆர்வம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

மற்ற சக்திவாய்ந்த நட்சத்திரங்கள்
வேத ஜோதிடத்தின் படி செல்வத்திற்கான மிக சக்திவாய்ந்த நட்சத்திரங்களில் மேற்கூறிய நட்சத்திரங்களை தவிர்த்து வேறுசில நட்சத்திரங்களும் உள்ளது. ரோகினி, உத்திரம், விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் பணரீதியாக சிறந்த ஆளுமைக் கொண்டவை. இதுதவிர்த்து அஸ்வினி, கேட்டை, பூசம், ஸ்வாதி நட்சத்திரங்களும் குறிப்பிடத்தக்க நன்மையைக் கொண்டுள்ளன.

Source : tamil boldsky