கொரோனாவால் 22 வயது யுவதி உயிரிழப்பு!

அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த யுவதியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. காலி, அம்பலாங்கொட பகுதியை சேர்ந்த உதரி விஷ்மிகா (22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தனியார் மருத்துவ பரிசோதனை கூடமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

காலி, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இளையவர்களிற்கு கொரோனா அபாயமில்லையென முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், இலங்கையில் பரவும் 3வது அலையில் இளையவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.