வடக்கில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் இளையோர்..!

வவுனியா மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என சுகாதார அதிகாரிகள் தொிவித்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே.20 வரையான காலப்பகுதியில் 655 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 544 பேரும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 54பேரும், வவுனியா தெற்கில் 23 பேரும்,

செட்டிகுளம் பிரிவில்34 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்களில் 19 வயதிற்குட்பட்ட 50 தொற்றாளர்களும், 1
9 தொடக்கம் 30 வயதிற்கிடைப்பட்ட வயதுடைய 273 தொற்றாளர்களும்,31-40 வயதிற்குட்பட்ட 131 தொற்றாளர்களும், 41 வயதிற்கு மேற்ப்பட்ட 197 தொற்றாளர்களும் இனம்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்தவருடம் ஒருவரும் இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 6 பேர் என

மொத்தம் 7 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வடக்கில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிகம் இளையோர் என கூறப்படுகின்றது.