இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ! 44 பேர் பலி

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 44 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் அதிக உயிரிழப்புக்கள் பதிவான முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

உயிரிழந்தவர்களுள் 71 வயதுக்கு மேற்பட்ட 23 பேரும்,61 முதல் 70 வயதுக்குட்பட்ட 11 பேரும் 51மற்றும் 60 வயதுக்குட்பட்ட 7 பேரும் அடங்குகின்றனர்,

அத்துடன் ஏனைய வயது பிரிவுகளுக்கு உட்டபட்ட மூன்று பேர் உள்ளடங்குவதாகவும் கொரோனா தடுப்பு செயலணி தெரிவிக்கின்றது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளமை குரிப்பிடத்தக்கது.