யாழில் இரு இளைஞர்கள் போதைப் பொருளுடன் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி நகரப்பகுதி இராணுவ சோதனைச் சாவடியில் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

380 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த நிலையில் இராணுவத்தினரின் சோதனையின் போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உடுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதான இளைஞர்கள் விசாரணைக்காக அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.