சிறுவர்கள் தொடர்பில் குழந்தை மருத்துவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் கோவிட் தொற்றினால் ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் 12 அகவைக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழந்தை மருத்துவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்னனர்.குழந்தைகளுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ஆலோசகர் குழந்தைகள் மருத்துவர் கலாநிதி; தீபால் பெரேரா இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.


குழந்தைகளைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவது மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த கட்டத்தில், அது எதிர்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் மிக எளிதாக பரவக்கூடும்.எனவே, தடுப்பூசிகளை செலுத்துவதற்கு தகுந்த மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் சிறுவர்கள்; நாட்டின் எதிர்காலம் என்று மருத்துவர் கூறியுள்ளார்.இதேவேளை பொதுமக்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பினால் அவர்கள் வைரஸை வீட்டிற்கு கொண்டுச் செல்லக்கூடாது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வைரஸ் காரணமாக ஐந்து குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர்.இந்தநிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை விட தடுப்பு நடவடிக்கை எடுப்பது மிகவும் சிறந்தது என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி போன்ற போன்ற நகரங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி 16 அகவைக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் ஃபைசர் மொடர்னா தடுப்பூசி 12 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கும்; வழங்கப்படலாம் இதுவரை வெளியான அறிக்கையின்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சிறுவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் வைத்திய கலாநிதி; பெரேரா கூறியுள்ளார்.