இன்று காலை இடம்பெற்ற விபத்து 21 பேர் படுகாயம்!

நுவரெலியா – இராகலை பகுதியில் 42 தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ‘ட்ரெக்டர்’ விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர்.இதில் இருவர், அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று காலை, இராகலை- ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை, சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டிக்சன்கோனார் பகுதிக்கு வேலைக்கு அழைத்துச் சென்ற ட்ரக்டர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் சிறியதொரு பெட்டியில் பொறுப்பற்ற விதத்தில் 42 பேர் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் தொழில் பாதுகாப்பற்ற வகையிலேயே அவர்களை நிர்வாகம் அழைத்து வந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தினால் குறித்த பகுதியில் பதற்றமானதொரு சூழ்நிலை காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.