பத்து மில்லியன் ரூபா பணப்பரிமாற்றம் தொடர்பில் இளைஞர் கைது

10 மில்லியன் ரூபா பணப்பரிமாற்றம் தொடர்பில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோதர பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுபிட்டிய பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை முன்னெடுத்துச் சென்று, தொலைபேசிகளை வழங்குவதாக கூறி சுமார் 10 மில்லியன் ரூபாவினை 80 வாடிக்கையாளர்களிடம் இருந்து முற்பணமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த இளைஞன் கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்