யாழ்.சுன்னாகம் பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்..!

யாழ்.சுன்னாகம் – மயிலங்காடு பகுதியில் உள்ள வைரவர் கோவிலுக்கு முன்பாக எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்றுள்ள சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.